Enable Javscript for better performance
மீனவர்களிடம் தேர்தல் விழிப்புணர்வுப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி, தருவைகுளத்தில் மீனவ மக்களிடையே தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் ஒன்றியம் சார்பில் தருவைக்குளம் மீனவ கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மீன்பிடி படகுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும், தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கலைமாமணி கைலாசமூர்த்தி குழுவினர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெ. பெல்லா, மக்கள் தொடர்பு அலுவலர் இரா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் இந்துபாலா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai