Enable Javscript for better performance
மீன்பிடி, உப்பளத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: ஏபிசிவி சண்முகம்.- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடி, உப்பளத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிப்பேன்: ஏபிசிவி சண்முகம்.

    By dn  |   Published on : 27th March 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் உப்பளத் தொழில் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிப்பேன் என்றார் காங்கிரஸ் வேட்பாளர் ஏபிசிவி சண்முகம்.

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஏபிசிவி சண்கமுகம் மாநகரப் பகுதியில் புதன்கிழமை தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    பின்னர், டபுள்யூஜிசி சாலையில் தேர்தல் பணி அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:

    நாங்கள் யாரையும் குறை கூறி வாக்குகளை சேகரிக்கப்போவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க உள்ளோம். பல ஆண்டுகளாக திராவிட இயக்கங்களுக்காக காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றினார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி காணப்படுகிறது. தொண்டர்களின் உற்சாகத்தை பார்க்கும்போது காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு கண்முன்தெரிகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடி தொழில், உப்புத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தொழில்கள் தற்போது நசிந்து வருகின்றன. இதை புத்துணர்வு பெற வைப்பேன். மத்திய அரசு நிதியுதவியுடன் திமுக ஆட்சியில் தூத்துக்குடியில் தொடங்கப்பட்ட உணவு பூங்கா முழுமையாக செயல்படாமல் உள்ளது. அதனை மீண்டும் செயல்பட வைப்பேன்.

    தூத்துக்குடியில் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அல்லது துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரில் ஒருவர் வர வாய்ப்பு உள்ளது.  ஏப்ரல் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்கிறேன் என்றார் அவர்.

    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஏபிசிவீ சண்முகம் தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில், காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் பி. கதிர்வேல், தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்டிஆர் விஜயசீலன், மாநகர் மாவட்டத் தலைவர் ஏடிஎஸ் அருள்,  மாநகராட்சி மண்டல தலைவர் ஏ.டி.அலெக்சாண்டர், கவுன்சிலர் சந்திபோஸ், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், முன்னாள் தலைவர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai