Enable Javscript for better performance
மூதாட்டியை கட்டிப்போட்டு 9 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் பேரனுடன் இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 9 பவுன் நகையைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்களைப் போலீஸôர் தேடி வருகின்றனர்.

     தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் கிருஷ்ணனின் மனைவி சொர்ணவேலம்மாள் (75). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் இறந்துவிட்டதால், தனது பேரன் வேல்முருகனுடன் (21) சொர்ணவேலம்மாள் வசித்துவருகிறார்.

     இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், வேல்முருகன் படுத்திருந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டினராம்.

    பின்னர், சொர்ணவேலம்மாளிடம் சென்ற அவர்கள் இருவரும், அவரது கையை கட்டி விட்டு, அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனராம். இதுதொடர்பாக, முத்தையாபுரம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai