Enable Javscript for better performance
100 சதவிகித வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வை மேற்கொள்ள நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    100 சதவிகித வாக்குப் பதிவுக்கான விழிப்புணர்வை மேற்கொள்ள நடவடிக்கை

    Published on : 27th March 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் நூறு சதவிகித வாக்குப் பதிவுக்கான அனைத்து விழிப்புணர்வு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளர் உத்தரவிட்டுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்துக்கான பொதுத்தேர்தல் விழிப்புணர்வு பார்வையாளாராக நியமிக்கப்பட்ட சந்தோஷ்குமார் புதன்கிழமை தூத்துக்குடி வந்தார்.  பின்னர், அவர் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ம. ரவிக்குமாருடன் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, தேர்தல் தேதி அறிவிக்ப்பட்ட நாள் முதல் இதுவரை 12 ஊராட்சி ஒன்றியங்களின் வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக 177 பேரணி, 20 சைக்கிள் பேரணி, 60 மனிதச் சங்கிலி, 189 தெருமுனை பிரசாரங்கள், 45 கலைநிகழ்ச்சிகள், 76 கிராமங்களில் விடியோபடக் காட்சிகள் என மொத்தம் 657 தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 425 கிராம மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.

    இதையடுத்து, ஏப்ரல் 16-ம் தேதி வரை தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 100 சதவிகிதம் வாக்குகள் பதிவு செய்ய தேவையான தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என விழிப்புணர்வு பார்வையாளரான சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai