Enable Javscript for better performance
எட்டயபுரத்தில் தனியார் பேருந்து சிறைப்பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் தனியார் பேருந்து சிறைப்பிடிப்பு

    By எட்டயபுரம்  |   Published on : 17th April 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் பயணிகளை ஏற்ற மறுப்பதாகக் கூறி தனியார் பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், பொதுமக்களும் வியாழக்கிழமை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எட்டயபுரம் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் பயணிகளை ஏற்ற மறுத்து விதிமுறைகளை மீறுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம் வழியாக கோவில்பட்டிக்கு வியாழக்கிவமை புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில், எட்டயபுரம் செல்வற்காக அமர்ந்திருந்த பயணிகளை பேருந்தின் நடத்துநர் கட்டாயப்படுத்தி கீழே இறக்கிவிட்டாராம்.

    இதையறிந்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டயபுரம் வட்டச் செயலர் ரவீந்திரன் தலைமையில் அக்கட்சியினரும், விவசாயிகள் சங்க வட்டச் செயலர் நடராஜன், சி.ஐ.டி.யூ. மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்ணன், பாலமுருகன், செந்தில், ராமசுப்பு, சன்னாசி மற்றும் பொதுமக்கள் எட்டயபுரம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை மாலையில் திரண்டனர். அங்கு மாலை 6.45 மணி அளவில் வந்த ஒரு தனியார் பேருந்தை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த எட்டயபுரம் போலீஸார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பேருந்து விடுவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai