Enable Javscript for better performance
கி.வீரமணியைக் கண்டித்து இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கி.வீரமணியைக் கண்டித்து இந்து முன்னணி கையெழுத்து இயக்கம்

    By திருச்செந்தூர்  |   Published on : 17th April 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்து பெண்கள்  புனிதமாக மதிக்கும்  தாலி குறித்து அவதூறாகக் கூறியதாக தி.க.தலைவர் கி.வீரமணியைக் கண்டித்து திருச்செந்தூரில் இந்து முன்னணியினர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் கையெழுத்து வாங்கும் போராட்டம் நடத்தினர்.

     திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி தெற்கு மாவட்டத்தலைவர் வி.எஸ்.முருகேசன், மாவட்ட செய்தித்தொடர்பாளர் ஆர்.சுந்தரவேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.

     நகரத் தலைவர் எம்.அரிகிருஷ்ணன், பொதுச் செயலர் முத்துராஜ், நகரச் செயலர் சங்கர், நகரப் பொருளாளர் மணி,  கருங்குளம் ஒன்றியப் பொருளாளர் எஸ்.வேம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai