Enable Javscript for better performance
தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் 2 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    32 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், சட்டப்பூர்வ ஓய்வூதியமும் வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தொடர் வேலை நிறுத்தத்தை புதன்கிழமை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு, அமைப்பின் மாவட்டத் தலைவர் பொன்சேகர் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியூ மாநிலச் செயலர் ரசல், மாவட்டச் செயலர் வை.பாலசுப்பிரமணியன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலர் பூமயில், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் தமிழரசன், முன்னாள் மாநில துணைத் தலைவர் ஜெகவீரபாண்டிய கட்டபெம்மன்,  பொருளாளர் ஆண்டிச்சாமி என 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai