Enable Javscript for better performance
தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: ஆணையர்

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.18) குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் விநியோகிக்கப்படுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் பகுதிக்கு மின் பாதையான பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மின்தடை காரணமாக தலைமை  நீரேற்று நிலையத்தில் குடிநீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்பதால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai