Enable Javscript for better performance
தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், நாசரேத், சாத்தான்குளத்தில் ஏப்ரல் 18 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், நாசரேத், சாத்தான்குளத்தில் ஏப்ரல் 18 மின்தடை

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகரம், ஓட்டப்பிடாரம் மற்றும் சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.18) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் இரா. புருஷோத்தமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 வரை மின் விநியோகம் இருக்காது.

    அன்றையதினம் தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1-ஆம் ரயில்வே கேட், 2-ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபிள்யூ.ஜி.சி சாலை, ஜார்ஜ் சாலை, சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர், மில்லர்புரம்,  அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு,  சிதம்பரநகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார் புரம், திருச்செந்தூர் சாலை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இதனால், ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க. சுப்பிரமணியபுரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், வீரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்,நாசரேத்: ச சாத்தான்குளம் உப மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த உப மின் நிலையத்தைச் சேர்ந்த பகுதிகளிலும், நாசரேத், செம்மறிக்குளம், மூலைக்கரைப்பட்டி, பழனியப்பபுரம், நடுவக்குறிச்சி உபமின் நிலையங்களைச் சேர்ந்த பகுதிகளில் அன்றைய தினம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) சி.வெள்ளைசாமி தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai