Enable Javscript for better performance
பைக்குகள் மோதல்: மீன் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில்  மீன் வியாபாரி இறந்தார்.

    திசையன்விளையைச் சேர்ந்தவர் சி.முருகன்(66). மீன் வியாபாரியான இவர் புதன்கிழமை பைக்கில் தட்டார்மடம் வந்து மீன் விற்பனை செய்தாராம். பின்னர் மாலை பைக்கில் வீடு திரும்பிய போது, நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே வந்த பைக்,முருகன் ஓட்டி வந்த பைக் மீது மோதியதாம். இதில் காயம் ஏற்பட்ட முருகன்  சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர் இறந்தார்.

    இதுகுறித்து தட்டார்மடம்  காவல் ஆய்வாளர் ராபின்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai