Enable Javscript for better performance
மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் கலையியல் துறை சார்பில் வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் பிளஸ்2  மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முதல்வர் சண்முகவேல் அறிவியல் மற்றும் கலையியல் துறை தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலத்தைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் வேலை வாய்ப்பு ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி விழாவை தொடங்கி வைத்துப் பேசுகையில்,  தற்கால கல்வியின் தரம், பல்வேறு துறையில் உள்ள மேற்படிப்புகள், மேற்படிப்பிற்கான தகுதிகள் மற்றும் தற்போதுள்ள சூழ்நிலையில் எந்தப் பாடம் படித்தால் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்துப் பேசினார்.

    தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் ஜோசப் துரைராஜ் மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதனை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினார்.

    இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 88  பள்ளிகளைச் சேர்ந்த 1,650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கோமதி, தாளமுத்து, அருள் மற்றும் அறிவியல், கலையியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai