Enable Javscript for better performance
2 கல்லூரிக் கட்டடங்களுக்கு சீல் வைப்பு: அனுமதியின்றி கட்டியதால் நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    2 கல்லூரிக் கட்டடங்களுக்கு சீல் வைப்பு: அனுமதியின்றி கட்டியதால் நடவடிக்கை

    By தூத்துக்குடி  |   Published on : 17th April 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட 2 கல்லூரிக் கட்டடங்களுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நகர் ஊரமைப்புத் துறை தொழில்நுட்ப அனுமதி மற்றும் திட்ட அனுமதியின்றி செயல்பட்டு வரும் உயர் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 56 மற்றும் 57இன் படி மூடி முத்திரையிடுதல் நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    உரிய அனுமதி வேண்டி விண்ணப்பிக்காமலும் முறையான அனுமதியின்றியும் செயல்பட்டு வரும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வல்லநாடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, மறவன்மடத்தில் உள்ள தனியார் கல்லூரி ஆகியவை உரிய அனுமதி இல்லாமல் கட்டடம் கட்டியிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து, திருநெல்வேலி மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் (பொறுப்பு) ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இரண்டு கல்லூரிகளின் நிர்வாக கட்டடங்களையும் மூடி முத்திரையிடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோல, மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு அனுமதி பெறாமல் இயங்கும் கல்வி நிறுவனங்களும் மூடி முத்திரையிடப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai