Enable Javscript for better performance
2,318 பேருக்கு விலையில்லா பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஆறுமுகனேரி பேரூராட்சியில் 2,318 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கப்பட்டன.

    அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ரவிகுமார் தலைமை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் இப்பேரூராட்சிக்குள்பட்ட கந்தசாமிபுரம் பகுதியில் 13 வார்டுகளைச் சேர்ந்த 2,318 பயனாளிகளுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார்.

    இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆ.செல்லத்துரை, அதிமுக மாவட்டப் பொருளாளர் ஜெபமாலை, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலர் மு.ராமச்சந்திரன், திருச்செந்தூர் ஒன்றிய அதிமுக செயலர் அமலி டி.ராஜன், நகரச் செயலர் சா.பொன்ராஜ், நகரத் தலைவர் இ.அமிர்தராஜ், வழக்குரைஞர் ஜி.சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் ரா.ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் விஜயா தனசேகரன், மந்திரம், கே.பி.சந்திரன், ஜெயலலிதா பேரவை நகரச் செயலர் காந்தி என்ற ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai