சுடச்சுட

  

  பழையகாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

  By தூத்துக்குடி  |   Published on : 28th August 2015 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழையகாயலில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பழையகாயல் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் முன்கார் நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.   விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்க ஏதுவாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக பழையகாயலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

  அரசு உத்தரவுப்படி கிரேடு ஏ ரக நெல்லை குவிண்டால் ரூ.1470- க்கும், மற்ற ரக நெல் குவிண்டால் ரூ. 1410- க்கும் கொள்முதல் செய்யப்படும். நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பழையகாயல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai