Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநர் ஆய்வு

    By சாத்தான்குளம்  |   Published on : 27th January 2015 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்திருநகரி, கருங்குளம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன் நேரில் ஆய்வு செய்தார்.

    ஆழ்வார்திருநகரி ஊராட்சிக்குள்பட்ட கருங்கடல், கட்டாரிமங்கலம் ஊராட்சிப் பகுதிகளில் பழத்தோட்டம் அமைக்கும் பணியும், தாய் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்தப் பணிகளை மாவட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முன்னதாக அவர், கீழக்கருங்கடலில் நடைபெற்று வரும் பழத்தோட்டம் அமைக்கும் பணியையும், கட்டாரிமங்கலத்தில் தாய் திட்டப்பணிகள், இந்திரா குடியிருப்பு, பசுமை வீடு கட்டும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அப்போது, பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது, தொகுதி அலுவலர் ஜார்ஜ்மிக்கேல் ஆண்டனி, ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையாளர் லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி, கருங்கடல் ஊராட்சித் தலைவி தங்கசெல்வி, ஊராட்சி செயலர்கள் முருகேசன், வெங்கடேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    கருங்குளம் ஒன்றியம் செய்துங்கநல்லூர் பகுதியில் சுகாதாரப் பணிகளை பார்வையிட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், சுகாதாரப் பணிகள்குறித்து ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார். அதில், துணை திட்ட அலுவலர் ரெங்கநாயகி, ஆணையர் பாக்கியலீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

    பின்னர், கருங்குளம், வல்லநாடு, வடவல்லநாடு, கீழ வல்லநாடு உள்பட பல பகுதியை திட்ட இயக்குநர் பார்வையிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai