Enable Javscript for better performance
கோவில்பட்டியில் ரயில் மறியல் முயற்சி:3 பெண்கள் உள்பட 35 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் ரயில் மறியல் முயற்சி:3 பெண்கள் உள்பட 35 பேர் கைது

    By கோவில்பட்டி,  |   Published on : 27th January 2015 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட முயன்ற 3 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்; மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு மாற்றுப் பணியும், மறுவாழ்வும் ஏற்படுத்தித்தர வேண்டும்; தூய்மைப் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் நிலையம் முன் ஆதித்தமிழர் விடுதலை இயக்க மாநில துணைப் பொதுச்செயலர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்மண்டலச் செயலர் மனோகர், துணைச் செயலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

    அப்போது கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது, குற்றப்பிரிவு ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் போலீஸார் மறியலுக்கு முயன்ற ஆதித்தமிழர் விடுதலை இயக்க மாவட்டச் செயலர்கள் திலீபன் (வடக்கு), சண்முகவேல் (தெற்கு) மற்றும் 3 பெண்கள் உள்பட 35 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai