Enable Javscript for better performance
கோவில்பட்டியில் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியப் பொருள்களை இந்தியாவில் தயாரிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

    பேரணிக்கு ஜே.சி.ஐ. தலைவர் அருண் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், ஜே.சி.ஐ. முன்னாள் மண்டலத் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். பேரணி, உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில், இந்திய நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் பலப்படுத்தவும், இந்தியப் பொருள்களை இந்தியாவில் தயாரிப்போம் எனவும் பள்ளி மாணவர், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில், வட்டாட்சியர் முத்துராமலிங்கம், ஐ.சி.எம். பள்ளிச் செயலர் கண்ணன், ஜே.சி.ஐ. நிர்வாகிகள் பாலாஜி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai