Enable Javscript for better performance
அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர், ஜன. 27: திருச்செந்தூர் பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

    திருச்செந்தூர் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் திலீபன் மற்றும் போலீஸார் காயாமொழி பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி மதுவிற்ற ஸ்ரீவைகுண்டம் கால்வாய் தெற்குதெரு சுடலை மகன் மாயாண்டி, சாத்தான்குளம் வடக்கு பன்னம்பாறையைச் சேர்ந்த நல்லகண்ணு மகன் வேல் (34) ஆகியோரை   கைது செய்து, அவர்களிடமிருந்து 57 மதுபாட்டில்களையும் போலீஸார்  பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai