Enable Javscript for better performance
\\\"ஆடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "ஆடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம்'

    By ஆறுமுகனேரி  |   Published on : 28th January 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி, ஜன. 27: காயல்பட்டினத்தில் பொது இடங்களில் ஆடுகள் சுற்றித் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காயல்பட்டினத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த ஆடுகளை நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பிடித்தனர்.

    கால்நடைகளை வளர்ப்போர், அவற்றை முறையாகப் பராமரித்து, இரவில் தொழுவத்தில் கட்டி வைக்க வேண்டும். இல்லையெனில், நகரில் சுற்றித் திரியும் கால்நடைகள் நகராட்சியால் பிடிக்கப்பட்டு, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai