Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரியில் சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரியில் சிறப்பு மருத்துவ முகாம்

    By சாத்தான்குளம்  |   Published on : 28th January 2015 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம், ஜன. 27: ஆழ்வார்திருநகரி மீரானியா நடுநிலைப் பள்ளியில்  தவ்ஹித் ஜமாஅத் மற்றும் ஷிபா மருத்துவமனை ஆகியன சார்பில் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்ட இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு தவ்ஹித் ஜமாஅத் நகரத் தலைவர் சித்திக்ரியாஸ் தலைமை வகித்தார். ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் முஹம்மதுஷாபி, தவ்ஹித் ஜமாஅத் மாவட்டச் செயலர் அஹமதுகாதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலர் ரஸ்தாசெல்வம் முகாமைத் தொடங்கிவைத்தார்.

    இதில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராஜமன்னார், ஆழ்வார்திருநகரி பேரூராட்சித் தலைவர் ஆதிநாதன், ஆய்வாளர் தங்ககிருஷ்ணன், தவ்ஹித் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் கோதர்பாவா, மாவட்டச் செயலர் செய்யது அலி, பள்ளித் தாளாளர் ஹமீது ரஸ்வி, கவுன்சிலர்கள் அபூதாஹீர், மாஜீதா, நாம் தமிழர் கட்சி ஒன்றியச் செயலர் சுடலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தவ்ஹித் ஜமாஅத் நகரச் செயலர் சுல்தான் பாஸில் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai