Enable Javscript for better performance
இந்திய கடற்படை அதிகாரி நெல்லையில் தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    இந்திய கடற்படை அதிகாரி நெல்லையில் தூக்கிட்டுத் தற்கொலை

    By திருநெல்வேலி  |   Published on : 28th January 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருநெல்வேலி, ஜன. 27: இந்திய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் திருநெல்வேலியில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    பெருமாள்புரம் தமிழ்நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் தங்கதுரை (29). இவர், இந்திய கடற்படையில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வந்தார். மகாராஷ்டிர மாநிலம் சிராலி பகுதியில் பணியில் இருந்த இவர், கடந்த 25ஆம் தேதி பெருமாள்புரத்துக்கு வந்தாராம்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சமையலறையில் சேலையால் தூக்கிட்டு தங்கதுரை தற்கொலை செய்துகொண்டது  தெரியவந்ததாம்.

    பெருமாள்புரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், தங்கதுரை காதல் தோல்வி காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாகவும், சில கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai