Enable Javscript for better performance
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் காயம்: ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் காயம்: ஓட்டுநர் கைது

    By கோவில்பட்டி  |   Published on : 28th January 2015 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி, ஜன. 27: கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் காயமடைந்தார்.

    இது தொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

    கோவில்பட்டியையடுத்த சிவந்திபட்டி மேலத் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மனைவி சுகந்தி (34). இவர் முடுக்கலான்குளம் விலக்கு அருகே தனியார் பேருந்தில் கோவில்பட்டிக்கு செல்வதற்காக ஏறினாராம்.

    பேருந்து பாண்டவர்மங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது உள்ளே நின்று கொண்டிருந்த சுகந்தி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சுகந்தி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தனியார் பேருந்து ஓட்டுநர் குருமலை வடக்குத் தெருவைச் சேர்ந்த ர. கருப்பசாமியை (28) கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai