Enable Javscript for better performance
காயல்பட்டினத்தில் கொசுப்புழுவை உண்ணும் மீன்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினத்தில் கொசுப்புழுவை உண்ணும் மீன்கள் விநியோகம்

    By ஆறுமுகனேரி  |   Published on : 28th January 2015 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி, ஜன. 27: காயல்பட்டினம் நகராட்சியில், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கொசுப்புழுக்களைச் சாப்பிடும் மீன்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    டெங்கு உள்ளிட்ட விஷக்காய்ச்சல் நோய்களுக்கு எதிராக நகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பேசிய நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், வீடுகளில் பயன்பாடற்ற பாத்திரங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும், நோய் தடுப்புப் பணியில் ஈடுபடும் நகராட்சிப் பணியாளர்களுக்கு ஒத்துழைக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். பின்னர், நகர்மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பொதுமக்களுக்கு, நோய்க்கிருமிகளையும், கொசுப் புழுக்களையும் சாப்பிடும் மீன்களை, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் வழங்கினர். மீன்கள் தேவைப்படுவோர், நகராட்சி அலுவலக வேலை நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai