Enable Javscript for better performance
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலர் ஆய்வு

    By ஆறுமுகனேரி  |   Published on : 28th January 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆறுமுகனேரி, ஜன. 27: காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசு சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ அறை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அவர், மருத்துவமனையில் வழங்கப்படும் சேவைகள் குறித்து, புறநோயாளிகளிடம் விசாரித்தார்.  அவரிடம், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நிறைவேற்ற நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கோரிக்கை விடுத்தார்.

    ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் திவாகரன், துணை இயக்குநர் உமா, சுகாதார திட்டப் பணிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிங்ஸ்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai