Enable Javscript for better performance
கோவில்பட்டியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 28th January 2015 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி, ஜன. 27: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முயன்று வருவதாகக் கூறி அதைக் கண்டித்து காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கோவில்பட்டி தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (எஸ்.சி. பிரிவு) தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் மரியாள்முத்துசுயம்பு, மாவட்ட அமைப்பாளர் சிவகுமார், நகர தலைவர் முத்துமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாடசாமி,தங்கபழம்,விஜய், பாலசுப்பிரமணியன், சங்கர்கணேஷ், சின்னப்பன், ராஜசேகர், முத்து, ராஜையா, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai