Enable Javscript for better performance
சாத்தான்குளம் பள்ளியில் மூலிகைகள் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் பள்ளியில் மூலிகைகள் கண்காட்சி

    By சாத்தான்குளம்  |   Published on : 28th January 2015 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம், ஜன. 27: சாத்தான்குளத்தில் மூலிகைகள் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

    மூலிகை மருத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளியில் மூலிகை கண்காட்சியை ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் நினைவு மேல்நிலைப் பள்ளி தாளாளர் கே. தங்கராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரூராட்சித் தலைவர் ஆ.செ. ஜோசப், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர், சிஎஸ்ஐ ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரி தாளாளர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மூலிகை மருத்துவர் செல்வராஜ் மதுரம் வரவேற்றார். இதில் அனைத்து வகையான மூலிகைச் செடிகள் கொண்டு வரப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக நிகழ்ச்சியில் மூலிகைப் பொடி மூலம் மணல் மற்றும் தண்ணீர் கயிறுபோல் திரித்து காட்டப்பட்டது.

    தொடர்ந்து கண்காட்சியை பள்ளி மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர். இதில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மகாபால்துரை, பன்னம்பாறை இயற்கை மருத்துவர் விநாயகம், பேரூராட்சி கவுன்சிலர் சரவணன், வழக்குரைஞர் தியோனிஷ் சசிமார்சன், புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மெர்ஸிஆன்டனி, தொழிலதிபர்கள் செல்வசிங்பாலையா, நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai