Enable Javscript for better performance
திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

    By திருச்செந்தூர்  |   Published on : 28th January 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர், ஜன. 27: திருச்செந்தூர் தெப்பக்குளத்தில் மூழ்கி உடன்குடியைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்தார்.

    உடன்குடி மறக்குடித் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (75). அப்பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்த அவருக்கு வெள்ளைத்தாய் (65) என்ற மனைவியும், 4 மகன்களும், 6 மகள்களும் உள்ளனர். கடந்த 25 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த மாடசாமியை திடீரென காணவில்லையாம். அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் கோயில் தெப்பக்குளத்தில் அவரது சடலம் மிதந்தது. தகவலறிந்த திருச்செந்தூர் கோயில் போலீஸார் மாடசாமியின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai