Enable Javscript for better performance
தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஒப்பந்ததாரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27 :  தூத்துக்குடியில் கட்டட ஒப்பந்ததாரர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்தவர் சகாய தமிழன்கோபி (43). கட்டட ஒப்பந்ததாரரான இவர், கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தாராம்.

    25ஆம் தேதி திரும்பிய சகாயதமிழன் கோபி வீட்டைத் திறந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 22 கிராம் தங்க நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 100 கிராம் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இந்த திருட்டு குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai