Enable Javscript for better performance
பெண்கள் கையில்தான் சமுதாய, குடும்ப முன்னேற்றங்கள் உள்ளன: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    பெண்கள் கையில்தான் சமுதாய, குடும்ப முன்னேற்றங்கள் உள்ளன: ஆட்சியர்

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27: சமுதாய முன்னேற்றமும், குடும்ப முன்னேற்றமும் பெண்கள் கையில்தான் உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

    குடியரசுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. குலையன்கரிசல் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியர் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது:

    கிராமப்புற மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. சமுதாய முன்னேற்றமும், குடும்ப முன்னேற்றமும் பெண்கள் கையில்தான் உள்ளது. தமிழகத்தில் மட்டுமே சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்த தினம், மே தினம் ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விரைவில் பகுதிநேர மருத்துவமனையோ அல்லது மொபைல் வாகனத்தின் மூலமாக மருத்துவ வசதிகளோ செய்து தரப்படும். சாலைவசதி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். கண்மாயை தூர்வாரும் பணி தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக செய்து கொடுக்கப்படும்.

    குலையன்கரிசல், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் விரைவில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளன. தனிநபர் கழிவறை கட்டுவதற்காக ரூ.11,100 மானியமாக வழங்குவதை பயன்படுத்தி அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிவறை அமைக்க வேண்டும் என்றார் அவர்.

    கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வீரபுத்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) சண்முகவல்லி, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, ஊராட்சித் தலைவர் குணதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai