Enable Javscript for better performance
போலீஸார் கடைகளை சேதப்படுத்துவது தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    போலீஸார் கடைகளை சேதப்படுத்துவது தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடியில் இரவு நேரங்களில் கடைகளை உடைத்து பொருள்களை சேதப்படுத்தும் நடவடிக்கையை போலீஸார் தொடர்ந்தால் போலீûஸ கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் சங்கத் தலைவர் பா.விநாயகமூர்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சங்க சட்ட ஆலோசகர் சொக்கலிங்கம், பொதுச் செயலர் பாஸ்கர், துணைச் செயலர் ராஜா, பொருளாளர் ராஜலிங்கம், மாவட்டப் பொருளாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    தூத்துக்குடியில் இரவில் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என பல முறை காவல் துறைக்கு மனு அளித்தும், போலீஸாரின் அத்துமீறல் தொடர்ந்து வருகிறது. காவல் துறையின் நடவடிக்கை தொடர்ந்தால் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai