Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 28th January 2015 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர், ஜன. 27: திருச்செந்தூரில் மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் திருச்செந்தூர் பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.பேச்சியம்மாள் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ச.குருராமன், நகர காங்கிரஸ் தலைவர் டி.எஸ்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசின் செயல்பாடுகள்குறித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில், திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் முன்னாள் அமைப்பாளர் சு.கு.சந்திரசேகரன், வட்டார காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் ராஜாமணி, வட்டார காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு செயலர் அசோக்ராமன், மாவட்ட சேவாதள பொதுச்செயலர் க.சு.ஜெயந்திநாதன், சாத்தான்குளம் வட்டார எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் பாண்டி, திருச்செந்தூர் நகரச் செயலர் சஞ்சய் ஆறுமுகம், நகர துணைத் தலைவர் விஸ்வநாத பண்ணையார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலதிருச்செந்தூர் ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai