Enable Javscript for better performance
மாவட்ட செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசு

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்ட செஸ் கழகமும், டீகே பயிற்சி மையமும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சுப்பையா வித்யாலயம் பள்ளியில் இரண்டு நாள்கள் நடைபெற்றன. 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    9 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்களுக்கான பிரிவில், மாணவர் ஸ்டான்லி பிளஸ்சிங் முதலிடத்தையும், பேச்சிமுத்து இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

    மாணவிகளுக்கான பிரிவில் பூஜா தர்ஷினி முதலிடத்தையும், கலைமதி  இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

    11 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில், மாணவர் மிதிலேஷ் முதலிடத்தையும், ஜேசுவா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், மாணவி பவித்ரா முதலிடத்தையும், சுபாஷினி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

    13 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில், மாணவர் மிதுன் ஆனந்த் முதலிடத்தையும், அச்சுதன் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், மாணவி தனிஷா ராம் ஜோதி முதலிடத்தையும், ஜெய் பிரியா இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.

    17 வயதுக்குள்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில், மாணவர் ரோஷன் முதலிடத்தையும், அந்தோணி ரூஸ்வேல்ட் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில், மாணவி ரோஷினி முதலிடத்தையும், வானதி  இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை செயின்ட் தாமஸ் பள்ளி பெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் போஸ் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். வங்கியின் வட்டார மேலாளர் மாசிலாமணி, செஸ் கழக பொருளாளர் ரங்கராஜன், டீகே பயிற்சி மையத் தலைவர் வசீகரன், பேராசிரியை கற்பகவள்ளி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai