Enable Javscript for better performance
மீன்பிடித் துறைமுகத்தில் சுகாதாரத்தை பாதுகாக்கும் முறைகள்: அதிகாரி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மீன்பிடித் துறைமுகத்தில் சுகாதாரத்தை பாதுகாக்கும் முறைகள்: அதிகாரி விளக்கம்

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளத்தில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன்பதன தொழில்நுட்பத் துறை சார்பில் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன் இறங்குதளங்களில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    மீன்களில் உள்ள சத்துக்கள், மீன்கள் கெட்டுப்போவதற்கான காரணிகள், நொதிகள் மற்றும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளிட்டவைகுறித்து பேராசிரியர் வேலாயுதம், மீன்பிடித் துறைமும் மற்றும் மீன் இறங்குதளங்களில் சுகாதாரத்தைப் பாதுகாப்பது உள்ளிட்டவைகுறித்து பேராசிரியர் சுரேந்திரராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

    முகாமில் கலந்துகொண்ட மீனவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோ. சுகுமார் சான்றிதழ்களை வழங்கினார். இதில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் சிவகுமார், மீன்பிடித் தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai