Enable Javscript for better performance
வரிபாக்கி செலுத்த மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிக வளாக உரிமையாளர்- Dinamani

சுடச்சுட

    

    வரிபாக்கி செலுத்த மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிக வளாக உரிமையாளர்

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27: தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த மறுத்து செவ்வாய்க்கிழமை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வணிக வளாக உரிமையாளரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

    தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் 14 கடைகள் கொண்ட வணிக வளாகத்தை நடத்தி வருபவர் கைலாசம். இவருக்குச் சொந்தமான கட்டடத்தின் மேல் மாடியில் ஹோட்டல் நடத்தி வருபவர் நீண்ட நாள்களாக காலி செய்ய மறுத்து வருகிறாராம்.

    இந்நிலையில், கைலாசம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை கட்டாமல் ரூ.28,500 பாக்கி வைத்துள்ளாராம். வரியைக் கட்டாததால் கட்டடத்துக்கான குடிநீர் இணைப்பை துண்டிக்க செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் சென்றனராம்.

    இதைக் கண்டித்து கைலாசம் திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தென்பாகம் போலீஸார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai