Enable Javscript for better performance
வாகனங்களுக்கு போலி எண் பலகை விற்பனை: 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு- Dinamani

சுடச்சுட

    

    வாகனங்களுக்கு போலி எண் பலகை விற்பனை: 3 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு

    By தூத்துக்குடி  |   Published on : 28th January 2015 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி, ஜன. 27:  தூத்துக்குடியில் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எண் பலகையை (நம்பர் பிளேட்) போலியான முறையில் தயாரித்து விற்பனை செய்ததாக 3 நிறுவனங்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் சண்முகராஜ் (36). இவர் தனது காருக்கு நம்பர் பிளேட் வாங்குவதற்காக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் எதிரேயுள்ள கார் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனத்துக்குச் சென்றாராம்.

    அப்போது, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சக்கரவர்த்தி தரமான வாகன எண் பலகை என்ற பெயரில் (ஐசஈ) விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சண்முகராஜ் விசாரித்ததில் அது போலியான வாகன எண் பலகை என தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில், சக்கரவர்த்தி மீது மோசடியாக போலியான வாகன எண் பலகை விற்பனை செய்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதேபோல், தூத்துக்குடி ஜின் பாக்டரி சாலையில் கார் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்திவரும் முருகவேல் (40), சிதம்பரநகரில் கார் உதிரி பாகங்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வரும் பக்ருதீன் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai