Enable Javscript for better performance
வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர், ஜன. 27: திருச்செந்தூர் அருகே மளிகைக் கடை வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்செந்தூர் அருகே தளவாய்புரம் ஆறுமுகபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து (55). கோவையில் மளிகை நடத்தி வந்த அவருக்கு, மனைவி மற்றும் 3 மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், சில நாள்களுக்கு முன் கோவையில் இருந்து ஆறுமுகபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்த பேச்சிமுத்து, திங்கள்கிழமை காலை அங்கு தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடந்தாராம்.

    இத்தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் கோ.பத்மநாபபிள்ளை மற்றும் போலீஸார் விரைந்து சென்று, பேச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai