Enable Javscript for better performance
உடன்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு அதன் அவைத்தலைவர் எல்.எஸ்.ரிபாய்தீன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர்கள் ஜெயபால், ஐகோர்ட் துரை, இசக்கியம்மாள், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர திமுக செயலர் ஜான் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக மாவட்டச் செயலர் என்.பெரியசாமி, உடன்குடி ஒன்றியத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும், கட்சியின் தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார் அவர்.

    இதில் உடன்குடி ஒன்றிய திமுக செயலர் டி.பி.பாலசிங்,முன்னாள் ஒன்றிய செயலர் அ.சக்திவேல்,கிளைச்செயலர்கள் இளங்கோ(பரமன்குறிச்சி)மகராஜன்(குலசேகரன்பட்டினம்)மாவட்ட துணைச் செயலர் ராஜமோகன் செல்வின்,பொதுக்குழு உறுப்பினர் காசியானந்தம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் சலீம் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai