சுடச்சுட

  

  உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி

  By கோவில்பட்டி,  |   Published on : 01st June 2015 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவில்பட்டியில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வுப்பேரணி மற்றும் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், புற்றுநோய் இல்லாத உலகத்தை உருவாக்கவும், புற்று நோய் இறப்புகளை தடுக்கவும், உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு மே 31ஆம் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு தினமாக அறிவித்தது. இதையொட்டி, கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்டளை, தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசாரம், பேரணி ஆகியவை பயணியர் விடுதி முன் நடைபெற்றது.

  பேரணியை ஏ.எஸ்.பி. முரளிரம்பா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இப்பேரணி, பிரதான சாலை, சந்தைப்பேட்டைத் தெரு வழியாக மீண்டும் பயணியர் விடுதியை அடைந்தது.

  பின்னர், புகையிலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் விநியோகத்தை ஏ.எஸ்.பி. தொடங்கிவைத்தார். இதில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள் 50-கும் மேற்பட்டோர் சிகரெட்டுடன் கூடிய எலும்பு மண்டை ஓடு உள்ள முகமூடி அணிந்து பேருந்து நிலையம் மற்றும் முக்கிய இடங்களில் புகையிலை எதிர்ப்பு துண்டுப்பிரசுரங்களை வழங்கினர்.

  இந்நிகழ்வுக்கு தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகி கணேஷ் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார்.

  பின்னர் புகையிலையை எந்த வழியிலும் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  இதில், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் (பொ) சுரேஷ், பயிலும் குழு உறுப்பினர்கள் நிர்மல்குமார், கிருஷ்ணபாரத் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சியாளர் மணிகண்டன் வரவேற்றார். சுந்தர் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai