கயத்தாறில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக 3 பேர் கைது
By கோவில்பட்டி | Published on : 01st June 2015 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கயத்தாறில் அரசுப் பேருந்து மீது கல் வீசி அதன் ஓட்டுநரைத் தாக்கியதாக 3 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விளாத்திகுளத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தை விளாத்திகுளம், மதுரை சாலையைச் சேர்ந்த சு.ராகவன் ஓட்டினார்.
அந்தப் பேருந்து கயத்தாறு புதிய பேருந்து நிலையம் அருகே சென்றபோது பைக்கில் வந்த 3 இளைஞர்கள் பேருந்தை மறித்தனராம். ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதும் பைக்கில் வந்த 3 பேரும் பேருந்தின் மீது கல் வீசினார்களாம்.
இதையடுத்து பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் ராகவனையும் அவர்கள் தாக்கினார்களாம். இத்தகவலறிந்த கயத்தாறு போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பைக்கில் வந்த 3 இளைஞர்களையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், கயத்தாறு தெற்கு தெருவைச் சேர்ந்த மு.நாகராஜன்(32), கங்கைகொண்டானையடுத்த வடகரையைச் சேர்ந்த பெரியசாமி மகன் துரைப்பாண்டி(39), தாழையூத்து அருணாசலம் மகன் தங்கச்செல்வன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து பைக்கையும் பறிமுதல் செய்த போலீஸார், கல் வீசி தாக்கியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.