சுடச்சுட

    

    சாத்தான்குளம் மாதா ஆலயத்தில் சப்பர பவனி

    By சாத்தான்குளம்,  |   Published on : 01st June 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் புனித மரியாளின் மாசற்ற திருஇருதய மாதா ஆலயத்தில் சனிக்கிழமை இரவு சப்பரபவனி நடைபெற்றது.

    சாத்தான்குளம் புனித மரியாளின் மாசற்ற திருஇருதய ஆலயத்தில் மே மாதம் மாதாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

    இதையொட்டி மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து வட்டார முதன்மை குரு எட்வர்ட் ஜே அடிகள் தலைமையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. மே மாத கடைசி சனிக்கிழமை இத்திருவிழா நிறைவு நாளையொட்டி காலை சிறப்பு ஆராதனைகளும், மாலை சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெற்றது.

    பின்னர், மாதாவின் திருஉருவ சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் மூவொரு இறைவன் திருவிழா நடைபெற்றது. இதில் வட்டார முதன்மை குருவின் சிறப்பு கூட்டு திருப்பலி உள்ளிட்ட பல்வேறு ஆராதனைகள் நடைபெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai