சுடச்சுட

  

  சாலையோரம் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்கக் கோரிக்கை

  By ஆறுமுகனேரி  |   Published on : 01st June 2015 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆறுமுகனேரி சீனந்தோப்பு விலக்கில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டுமென தமாகா வலியுறுத்தியுள்ளது.

  ஆறுமுகனேரியில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம், நகர பொறுப்பாளர் சுந்தர்லிங்கம் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் இரா.தங்கமணி மற்றும் கோயில்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.முருகன் வரவேற்றார்.

  கூட்டத்தில், ஆறுமுகனேரி- திருச்செந்தூர் சாலையில் சீனந்தோப்பு விலக்கு அருகே கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. வைகாசி விசாக திருநாளை முன்னிட்டு அவ்வழியே செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் இதனால் அவதிக்கு ஆளாகின்றனர். ஆகவே அந்த இடத்தை பேரூராட்சி நிர்வாகம் சுத்தம் செய்வதுடன், அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில பேச்சாளர் முத்தீஸ்வரி, டி.சுப்பிரமணியன், டி.பிரடிபால், சீனந்தோப்பு ஜெயக்குமார், வார்டு கவுன்சிலர் வின்சென்ட், முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், பாலமுருகன், லிங்கம், மகாராஜன், துரை, சுயம்புலிங்கம், பெரியசாமி, பேச்சியப்பன், கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai