சுடச்சுட

    

    திருச்செந்தூரில் சுகாதார ஆலோசனைக் கூட்டம்

    By திருச்செந்தூர்  |   Published on : 01st June 2015 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் பேரூராட்சி சார்பில் நகரை சுகாதாரமாக்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் பேரூராட்சிப் பகுதிகளை தூய்மையும், சுகாதாரமும் நிறைந்த நகராக மாற்றிடவும், நகர்ப் பகுதி மற்றும் ஆலந்தலை ஆகியவற்றில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவும் பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதற்கான கருத்துக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் (பொ) தொ.ராஜநளா தலைமை வகித்து, மரக்கன்றுகளை வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ச.கண்ணன் முன்னிலை வகித்தார். இதில், நகர வளர்ச்சி மற்றும் ஆலோசனைக்குழு தலைவர் ஆர்.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்டத் தலைவர் ரெ.காமராசு, நகர அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலர் ஆ.துரைசிங், பொருளாளர் ச.மா.கார்க்கி, துணைத் தலைவர்கள் சுடலை, ரெ.கண்ணன், தொழிலதிபர்கள் ஜி.அருள்ராஜா, பி.சந்திரன், ஆர்.தங்கராஜ், லட்சுமணன், கோ.ராதாகிருஷ்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெமினி, பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பேரூராட்சிப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai