சுடச்சுட

    

    கோவில்பட்டியில் பணத்துடன் பைக்கை திருடிச் சென்றதாக இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    கோவில்பட்டி, எட்டயபுரம் சாலையைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன் மகன் மகாதேவன்(52). மசாலா மற்றும் பிஸ்கட் விநியோக நிறுவனம் நடத்தி வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்குச் சென்று பணத்தை வசூலித்து பைக்கில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தாராம். பின்னர், பணத்துடன் பைக்கை வீட்டு முன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, பைக்கை காணவில்லையாம்.

    இதுகுறித்து அவர் அளித்த தகவலின்பேரில், போலீஸார் வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, பைக்கில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில், அவர் திருச்செந்தூர் நாலுமாவடி கிறிஸ்துவ தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் முருகன் (35) என்பதும், மகாதேவனின் பைக்கை பணத்துடன் திருடிக்கொண்டு வந்ததும் தெரியவந்ததாம்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், பைக்கையும், அதிலிருந்த ரூ.1.30 லட்சத்தையும் மீட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai