சுடச்சுட

  

  வைகாசி விசாகத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக திருச்செந்தூர் செல்லும் பக்தர்களுக்கு, சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம் சார்பில் முதலுதவி மருத்துவ மையம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

  திருசெந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த பக்தர்களுக்கு தசை வலி, கால் வீக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில், டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் சார்பில் சாகுபுரத்தில் முதலுதவி மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த மையத்தை டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் செயல் உதவித் தலைவர் (நிர்வாகம்) மே.சி. மேகநாதன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

  நிகழ்ச்சியில் செயல் உதவித் தலைவர் (காஸ்ட்டிக் சோடா) சுபாஷ் டாண்டன், பொது மேலாளர்கள் பத்ரபாபு, அருணகிரி, அருணகிரி (சிவில்), மேலாளர் சுப்பிரமணியம், துணை மேலாளர்கள் சித்திரைவேல், ராஜூ, மக்கள் தொடர்பு அதிகாரி அருணா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  டி.சி.டபிள்யூ. நிறுவன மருத்துவ அதிகாரி துரைமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக கழிப்பறை வசதியுடன் கூடிய தாற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ நிறுவன மக்கள் தொடர்பு துறையினர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai