முதலூரில் 1,614 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
By சாத்தான்குளம், | Published on : 01st June 2015 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
முதலூரில் 1,614 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம், முதலூர் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு, சாத்தான்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் ஒய்.எஸ். சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
முதலூர் ஊராட்சித் தலைவர் மீனாபொன்முருகேசன், ஒன்றிய அதிமுக செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெ. சரோஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் ப. வாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தியாகராஜன் கலந்துகொண்டு 1,614 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை வழங்கினார்.
இதில், பள்ளக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், மணிகண்டன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பொன்முருகேசன், ஊராட்சி அதிமுக செயலர் தங்கராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலர் முருகேசன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்தீஸ்வரன், ஊராட்சி துணைத் தலைவர் ராஜபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு செயலாக்க திட்ட துணை வட்டாட்சியர் சுந்தரராகவன் நன்றி கூறினார்.