Enable Javscript for better performance
மே தின பேரணி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில், மே தின பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்டத் தலைவர் டாக் ராஜா, மின்சார பிரிவு மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் மிகாவேல், கோட்டச் செயலர் சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    இதில், நகரச் செயலர் சங்கரபாண்டியன், முன்னாள் நகரச் செயலர் விஜயபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் லட்சுமணப்பெருமாள் ஆகியோர் பேசினர்.

    பேரணியில், அதிமுக கட்சி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ, சுமை ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் பங்கேற்றன.

    பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்து நிறைவடைந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai