சுடச்சுட

    

    அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீவைகுண்டம் அருகே சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்தவர் ம.இசக்கிபாண்டி (29). அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியிலிருந்து உடன்குடிக்கு பேருந்தை ஓட்டிச் சென்றபோது, மெஞ்ஞானபுரம் பிள்ளைவிளை கிராமம் அருகே எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிடுகையில் அந்த வாகனம் மீது உரசியதாம்.

    இதனால் வாகனத்தில் வந்த நபர்கள் இசக்கிபாண்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai