Enable Javscript for better performance
ஆட்டோ மோதி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரத்தில் ஆட்டோ மோதி சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

    எட்டயபுரம் பவுண்டுத் தெரு மாரியப்பன் மகன் முருகேசன் (46). கூலித் தொழிலாளியான இவர், மேலவாசல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே சென்ற ஆட்டோ அவர் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த முருகேசனை அப்பகுதியினர் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு இறந்தார்.

    இதுகுறித்து வழக்குப் பதிந்த எட்டயபுரம் போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் ராஜபாண்டியிடம்(57) விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai