Enable Javscript for better performance
ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

    By திருச்செந்தூர்  |   Published on : 02nd June 2015 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி மாலையில் ரொசாரி மாதா சபையினர் கொடியை கையில் ஏந்தி, ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக ஆலயம் வந்தனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு அமலிநகர் பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீசன் கொடியேற்றி, மறையுரையாற்றினார்.  தொடர்ந்து 13 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாநாள்களில் நாள்தோறும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மறையுரையும், மாலை 6 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. இம்மாதம் 12ஆம் தேதி 12ஆம் திருவிழாவை முன்னிட்டு, மாலையில் சிறப்பு ஆராதனையும், 13ஆம் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற உள்ளது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில், மணப்பாடு தூய ஆவி ஆலய பங்குத்தந்தை ஜேசுதாஸ், பத்திநாதபுரம் பங்குத்தந்தை ராஜன், இடிந்தகரை உதவி பங்குத்தந்தை டைட்டஸ், ஆன்மிக தந்தை அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை ஆலந்தலை பங்குத்தந்தை வில்சன், அருள்சகோதரிகள், ஊர் கமிட்டியினர், பக்த சபையினர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai