Enable Javscript for better performance
ஆழ்வார்திருநகரி பகுதியில் மதிமுக 22ஆம் ஆண்டு தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆழ்வார்திருநகரி பகுதியில் மதிமுக 22ஆம் ஆண்டு தொடக்க விழா

    By சாத்தான்குளம்  |   Published on : 02nd June 2015 03:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆழ்வார்திருநகரி பகுதியில் ஒன்றிய மதிமுக சார்பில், கட்சியின் 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. 

    நாசரேத் பேருந்து நிலையம் முன் உள்ளிட்ட 12 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,  மதிமுக மாநில துணைப் பொதுச்செயலர் நாசரேத் துரை தலைமை வகித்தார். மாநில தேர்தல் பணி துணைச் செயலர் குரு மத்தேயு ஜெபசிங், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் வே.இரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுக மாநிலப் பேச்சாளர் ஆலந்தூர் செல்வராஜ் பேசினார். பின்னர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில், கட்சி நிர்வாகிகள் ராபர்ட், பாபுசெல்வன், பீம்சிங், பரணிமோகன்சிங், செல்வராஜ், தொண்டர்படை கணேசன், ராஜரத்தினம், சுந்தர், சுடலைமுத்து, தராசு மகாராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, மூக்குப்பேரி, குரும்பூர் பகுதிகளில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai